எல்ல உட்பட மலையக ரயில் மார்க்கங்களுக்கான ‘இ-டிக்கெட்’ மோசடி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (20) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, சில குழுக்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆன்லைனில் அனைத்து பயணச்சீட்டுகளையும் வாங்கி, ரயில் நிலையங்களுக்கு அருகில் அதிக விலைக்கு சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதாக குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நேரத்தில் நீதிமன்றத்திற்கு உண்மைகள் தெரிவிக்கப்படும் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.