சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
6 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர், ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்
அத்துடன் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பாகங்கள், போலி இயந்திரம் மற்றும் சேசி எண்களைக் கொண்ட லொறியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது