அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 292.29 ரூபாவாகவும், 300.81 ரூபாவாகவும் காணப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 292.21 ரூபாவாகவும், 300.69 ரூபாவாகவும் காணப்பட்டது.
வளைகுடா நாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளது.