போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் சாதாரண பயணியாக பயணித்துள்ளார்.
அமைச்சர் பயணிகளுடன் உரையாடுவதையும், ரயிலில் பயணிகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கேட்டறிந்து கொள்ளும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதன்போது அடிக்கடி ரயில் தாமதம், மின் விசிறிகள் பழுதடைதல், மாற்றுத் திறனாளிகள் ரயில் ஏறும் போது ஏற்படும் சவால்கள், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலை, தொடர்ந்து பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி பயணிகள் கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.