செவ்வாயன்று (21) நடந்த 2025 அவுஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசா 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனையான கோகோ காஃப்பை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
27 வயதான படோசா தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதியை தருணம் இதுவாகும்.
இந்த போட்டியின் முடிவுடன் அமெரிக்க வீராங்கனையான கோகோ காஃப்பின் முதல் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்திற்கான கனவு கலைந்தது.