அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் இராணுவத்திலும் மாற்றுப் பாலினத்தவர்களை இணைப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”எல்லை விவகாரம், இயற்கைப் பேரிடர்கள், வெளிநாட்டு கொள்கைகள் எனப் பலவற்றிலும் பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப் ”அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை தனது நிர்வாகம் உறுதியாக பின்பற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.