கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று காலை, புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிசார் நடத்திய சுற்றிவளைப்பில் ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.