புதிய அரசாங்கம் நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தற்போதைய ஆட்சியாளர்களின் இயலாமையை
மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அரிசி விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடலில் பிரதானியாக இருப்பவர் டட்லி சிறிசேன. அதாவது மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஆவார்.
டட்லி சிறிசேன கடந்த ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கும் ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த அரசாங்கமும் இல்லாமல் போனது. கடந்த அரசாங்கத்தில் பின்பற்றிய கொள்கைகளை தற்போதைய அரசாங்கம் மாற்றியதன் பிரதிபலனையே இன்று மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் இனியும் பொறுமையாக இருக்க மாட்டார்கள்.
ஏனெனில் நாட்டு மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
இந்த அரசாங்கம் நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை குழப்புவது எமது நோக்கமல்ல. தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை குழப்பும் நடவடிக்கையினையே மேற்கொண்டிருந்தனர்” இவ்வாறு முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.