மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வயலுக்கு காவலுக்காக சென்றிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த விவசாயினை யானையொன்று துரத்திச் சென்றுள்ளதாகவும் இதனால் அச்சமடைந்த அவர் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்தவர் முதலைகுடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.