கடந்த 2021 ஆம் ஆண்டு தமது இல்லம் சேதமடைந்ததாகத் தெரிவித்து இழப்பீட்டினைப் பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் பெற்றுக் கொண்ட பணத்தொகை தொடர்பான விபரங்கள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ” ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்திலிருந்து சாதாரண பொது மக்கள் நிதியுதவியை பெற்றுக் கொள்ள எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், ஜனாதிபதி நிதியத்திலிருந்து முக்கியஸ்தர்கள் எவ்வளவு பணம பெற்றுக் கொண்டுள்ளார்கள்? எந்த பிரிவில் இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது தொடர்பான விடயங்களை நாம் கடந்த காலங்களில் தெரியப்படுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு தங்களுக்கு சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளார்கள் தெரியுமா? சொத்துக்கள் பகுதியளிவில் சேதமடைந்தாலோ, அல்லது முழுமையாக சோமடைந்தாலோ கொடுக்கப்படக்கூடிய அதிக கூடிய நஷ்டஈட்டுத் தொகையே 25 இலட்சம் ரூபாய்தான்.
ஆனால், அதிகாரத்தை கையில் வைத்திருந்த நபர்கள் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி எவ்வளவு நஷ்ட ஈட்டை பெற்றுக் கொண்டுள்ளார்கள் தெரியுமா?நான் இங்கே பெயர் விபரங்களுடன் தெரிவிக்கிறேன்.
கபில நுவான் அத்துகொரல- 5 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய்
விமலவீர திஸாநாயக்க – 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
கீதா குமாரசிங்க- 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்
ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி- 11 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய்
குணபால் ரத்னசேகர- 14 இலட்சத்து 12, 780 ரூபாய்
பிரேம்நாத் சி தொலவத்த – 23 இலட்சம் ரூபாய்
பிரியங்கர ஜயரத்ன- 23 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய்
சம்பத் அத்துகொரல – 25 இலட்சத்து 40, 610 ரூபாய்
ஜயந்த கெட்டகொட- 28 இலட்சத்து, 14,800 ரூபாய்
விமல் வீரவன்ஸ- 29 இலட்சத்து 54 ஆயிரம் ரூபாய்
சன்ன ஜயசுமன- 33 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய்
அகில எல்லாவெல- 35 இலட்சத்து 54, 250 ரூபாய்
சமல் ராஜபக்ஷ- 65 இலட்சத்து 39ஆயிரத்து 374 ரூபாய்
சந்திமவீரக்கொடி- 69 இலட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய்
அசோக பிரியந்த- 72 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய்
சமன் பரிய ஹேரத் – 105.2 இலட்சம் ரூபாய்
ஜனக பண்டார தென்னகோன்- 105.5 இலட்சம் ரூபாய்
ரோஹித அபேகுணவர்த்தன- 116.4 இலட்சம் ரூபாய்
சீதா அரம்பேபொல – 137.8 இலட்சம் ரூபாய்
சஹான் பிரதீப்- 171.3 இலட்சம் ரூபாய்
செஹான் சேமசிங்க- 185.1 இலட்சம் ரூபாய்
இந்திக அநுருத்த- 195.5 இலட்சம் ரூபாய்
மிலான் ஜயதிலக- 223 இலட்சம் ரூபாய்
ரமேஷ் பத்திரன- 281 இலட்சம் ரூபாய்
துமிந்த திஸாநாயக்க- 288 இலட்சம் ரூபாய்
கனக ஹேரத்- 292 இலட்சம் ரூபாய்
டி.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபாய்
பிரசன்ன ரணவீர- 327 இலட்சம் ரூபாய்
டபிள்யு.பி. டி. வீரசிங்க- 372 இலட்சம் ரூபாய்
சாந்த பண்டார- 391இலட்சம் ரூபாய்
சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபாய்
எஸ்;.எம்.சந்திரசேன- 438 இலட்சம் ரூபாய்
சிறிபால கம்லத்- 509 இலட்சம் ரூபாய்
அருந்திக பெர்ணான்டோ- 552 இலட்சம் ரூபாய்
சுமித் உடுக்கும்பர- 559 இலட்சம் ரூபாய்
பிரசன்ன ரணதுங்க- 561 இலட்சம் ரூபாய்
கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபாய்
மொஹான் சில்வா- 601 இலட்சம் ரூபாய்
நிமல் லன்சா- 692 இலட்சம் ரூபாய்
அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபாய்
காமினி லொகுகே- 749 இலட்சம் ரூபாய்
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ- 934 இலட்சம் ரூபாய்
கெஹலிய ரம்புக்வெல்ல- 959 இலட்சம் ரூபாய்
போராட்டக் காலத்தில் தங்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குறிப்பிட்டு, அரசாங்கத்திடமிருந்து இவர்கள் பெற்றுக் கொண்ட நட்ட ஈட்டுத் தொகையே இவை.
இந்த 43 பேர் மட்டும் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 122 கோடியே 41 இலட்சத்து 34 ஆயிரத்து 737 ரூபாவை நஷ்ட ஈடாகப் பெற்றுக் கொண்டுள்ளனர்” இவ்வாறு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.