கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது இறுதி டெஸ்ட்போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன “மிகவும் உணர்ச்சிகரமான நாள்” என்று கூறினார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் திமுத் கருணாரத்னவுக்கு கடைசி சில பந்துகளை வீசும் வாய்பு வழங்கபட்டது.
அதே வேலை “இது ஒரு நீண்ட வாழ்க்கை – எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் பிறகு நான் எனது அணியினருடன் அதிக நேரத்தைச் செலவீட்டு இருக்கின்றேன்” என்று அவர் கூறினார்.
அது மட்டுமன்றி “நான் அவர்களை விட்டு வெளியேறுகிறேன் ஆனால் இந்த அணி எப்போதும் என் இதயத்தில் இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.
பத்து வருடங்ககளுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் அணியில் உச்சதில் இருந்த திமுத் கருணாரத்ன தனது 36 வது வயதில் தனது ஓய்வு செய்தியை அறிவித்து இருந்தார்.
மேலும் “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது ஆச்சரியமாக இருந்தது. நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடுவது ஒரு பாக்கியம்” என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
அது மட்டுமன்றி திறமையான மற்றும் அன்பான தலைமைக்கு உரித்தனவராகவும் இருந்தார் .
2019 ஆம் ஆண்டு கொந்தளிப்பான நேரத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்றுஇ தென்னாப்பிரிக்காவில் இலங்கையை வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்துச் சென்றதும் குறிபிடதக்கது.
2019 ஆம் ஆண்டு கொந்தளிப்பான நேரத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்றுஇ தென்னாப்பிரிக்காவில் இலங்கையை வரலாற்று தொடர் வெற்றிக்கு அழைத்து சென்று தனது தலைமைதுவ பொறுப்பை விட்டு வெளியேறினார் என்பதும் குறிபிடதக்கது.
பல மகிழ்ச்சியான நினைவுகளுடன் விளையாடிய பிறகுஇ இப்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும்இ பயிற்சியாளராக மாற விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் நான் பயிற்றுவிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார். நான் இங்கே அல்லது வெளிநாட்டில் பயிற்சியைத் தொடங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார்.