போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் பேரில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று (11) தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளின் பட்டியல் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினூடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அவ்வாறான உத்தியோகத்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருளை பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் பாவனையில் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மன்னிப்போ அல்லது இரண்டாவது வாய்ப்போ வழங்கப்பட மாட்டாது.
ஏனெனில் இது போன்ற சில நபர்கள் முழு பொலிஸ் சேவையையும் இழிவுக்கு உள்ளாகுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.