உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகளால் விழிப்புணர்வு நடைபவனியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதேசத்தில் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 பேர் இனம் காணப்பட்டுள்ள நிலையிலேயே பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வூட்டும் வகையில் குறித்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு பேரணியில் கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தின் வைத்தியர் திருமதி. தர்ஷினி காந்தரூபன், தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர். லிபோஜிதா தொற்று நோயியல் வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அத்துடன் தாதியர் பயிற்சியின் பாடசாலை அதிபர், விரிவுரையாளர்கள், தாதிய பாடசாலையின் மாணவர்கள் எனப் பலரும் இந் நடைபவனியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.