நாளை (12) மின் வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும், இன்றைய (11) மின்வெட்டுக்கான அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதுமான 90 நிமிட மின்வெட்டு இன்று பிற்பகல் 03.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை நான்கு பிரிவுகளின் கீழ் அமல்படுத்தப்படும்.
தேசிய மின்சார அமைப்பிற்கு 900 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.