இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 07 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எஞ்சிய 06 சம்பவங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகளினால் நடத்தப்பட்டவை.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
மேலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று T-56 துப்பாக்கிகள் மற்றும் 05 கைத்துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இந்தக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.