கொழும்பு பொரெல்ல பகுதியில் அமைந்துள்ள அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊழியர்கள் சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் சிற்றுண்டிச்சாலையில் உண்பதற்கு மறுத்தாகவும்
அதனை தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வாங்குவதற்காக வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு பாதுகாப்பு அதிகாரி அனுமதி வழங்காத நிலையில் வாக்குவாதம் ஒன்று ஏற்பட்டிருந்து.
அது தொடர்பான காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அதிகாரிக்காக, பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள காவலர் அறையில் இருந்து கூரிய ஆயத்தை கொண்டு வந்திருந்துடன் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து பொரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.