லிபிய கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் பயணித்த படகொன்று நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேரை காணவில்லை எனவும் 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் ஐரோப்பாவிற்கு ஆபத்தான மற்றும் சட்டவிரோத பயணங்களைத் தொடங்குவதற்காக கடத்தல்காரர்களுக்கு பெரும் தொகையை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட ஆபிரிக்காவை ஐரோப்பாவிலிருந்து பிரிக்கும் மத்தியதரைக் கடலில் மூழ்கும் நெரிசலான படகுகளில் மூழ்கி விழுபவர்களில் பாகிஸ்தானியர்களும் அடிக்கடி உள்ளனர்.
இது உலகின் மிகவும் ஆபத்தான புலம்பெயர்ந்தோர் பாதையாகும். பாகிஸ்தானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40,000 சட்டவிரோத பயணங்களை முயற்சிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.