கடந்த மாதம் ஏர் பூசன் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர், விமானப் பாதுகாப்பு விதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் வியாழக்கிழமை (13) அறிவித்தது.
இதில் விமானங்களில் அனுமதிக்கப்பட்ட சிறிய மின்கலங்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் அடங்கும்.
மார்ச் முதலாம் திகதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், பயணிகள் ஐந்து 100 வாட்-மணிநேர மின்கலங்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரத்தில் 160 வாட்-மணிநேரத்திற்கும் அதிகமான மின்கலங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பாதுகாப்பு சோதனைகளில் மின்கலங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைச் சரிபார்ப்பதும், விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடிய மின்கலங்களை மின்னேற்றம் செய்வதும் தடைசெய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம் ஏர் பூசன் இதேபோன்ற ஒரு முடிவினை எடுத்திருந்தது.
அதன்படி தேசிய விமான நிறுவனம், பயணிகள் விமானத்தின் மேல்நிலை கேபின் தொட்டிகளில் சேமிக்கப்பட்ட பொருட்களின் பவர் பேங்க்கள் மற்றும் இ-சிகரெட்டுகளை வைத்திருப்பதைத் தடை செய்வதாக அறிவித்திருந்தது.
தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28 ஆம் திகதி ஹொங்கொங்கிற்கு புறப்பட்ட தயார் நிலையில் இருந்த தேசிய விமான நிறுவனமான ஏர் பூசானுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தீப்பிடித்தது.
விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், மின்கலத்தில் ஏற்பட்ட தீப்பரவல் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேககிக்கப்படுகிறது.
விமானத்தின் பின்புற இடது பக்கத்தில் உள்ள ஒரு மேல்நிலை பொதிகள் சேமிப்பு தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை முதலில் விமானப் பணிப்பெண் ஒருவர் கண்டறிந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீப்பரவலை அடுத்து விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.