ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார்.
இரு கட்சியினரும் இதற்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், கலந்துரையாடல்களை தொடர்வதற்கு குழுவொன்று நியமித்தது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.