நாட்டில் நிலவி வரும் வெப்பமான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெயிலில் அதிக நேரம் செலவளிப்பதற்கு இடமளிக்க வேண்டாமென கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகளில் இல்லங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை உள்ளடக்கிய சுற்றுநிரூபமொன்றை கல்வி அமைச்சு வெளியிடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவிர, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் கால அளவும் குறைக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.