உக்ரேனில் மொஸ்கோவின் ஏறக்குறைய மூன்றாண்டு காலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்ய அதிகாரிகளுடன் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திங்களன்று சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் பேசி, போர் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அவர் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக பலமுறை சபதம் செய்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் வந்துள்ளன.
காசா பகுதியின் எதிர்காலம் குறித்து வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ரியாத், ஜனவரி 20 அன்று பதவியேற்ற ட்ரம்ப் நிர்வாகத்திற்கும், கடந்த வாரம் கைதிகளை மாற்றுவதற்கு மொஸ்கோவிற்கும் இடையிலான ஆரம்ப தொடர்புகளில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவை சென்றடைந்த அமெரிக்க உயர் தூதர் ரூபியோ, ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோருடன் சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
எனினும், அவர்கள் ரஷ்யாவிலிருந்து யாரை சந்திப்பார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்ய செய்தித்தாள் கொம்மர்சன்ட், பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையேயான பல வருடங்களில் முதல் உயர்மட்ட நேரில் கலந்துரையாடல்களில் ஒன்றாக இந்த பேச்சுக்கள் இருக்கும்.
மேலும் இது அமெரிக்க மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பிற்கு முன்னதாக இருக்கும்.