2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் இந்தியக் கொடி இல்லாத வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவைத் தவிர இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கொடிகளும் மைதானத்தில் ஏற்றப்பட்டுள்ளதை குறித்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.
ஐசிசி நிகழ்வுகளின் போது ஒவ்வொரு மைதானத்திலும் பங்கேற்கும் அணிகளின் அனைத்துக் கொடிகளையும் வைத்திருப்பது வழக்கம்.
எனினும், அண்மைய நடவடிக்கை ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏன் ஏற்றப்படவில்லை என்றும் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.
இருப்பினும், வீடியோவின் நம்பகத்தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
முழு வீடியோவையும் கீழே காணலாம்:
இந்தியக் கொடி இல்லாததற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், ரோஹித் ஷர்மாவும் அவரது அணியும் டுபாயில் தங்கள் அனைத்து சாம்பியன் டிராபடி போட்டிகளில் விளையாடுவார்கள்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்ல அரசு அனுமதி மறுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.