பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை” என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
அதேநேரம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த மக்ரோன், “எங்கள் மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணிகளைத் தொடர வேண்டும் என்ற எனது அரசாங்கத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் ” – என்றார்.
கொங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.