நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடந்த கார் பந்தயத்தில் இரண்டு முறை விபத்துக்குள்ளானார்.
தற்போது தனது சொந்த அணிக்காக போர்ஸ் ஸ்பிரிண்ட் சவாலில் பங்கேற்று வரும் அஜித்குமார், முதல் விபத்துக்குப் பிறகு மீண்டும் எழுந்தார்.
இரண்டாவது விபத்தின் போது அவரது கார் இரண்டு முறை கவிழ்ந்தது.
ஆனால் அவர் மீண்டும் எழுந்து பந்தயத்தில் 14 ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஸ்பெயினின் வலென்சியாவில் அண்மையில் நடந்த விபத்து தெடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
விபத்து வீடியோவை அஜித்குமாரின் முகாமையாளர் சுரேஷ் சந்திரா சனிக்கிழமை எக்ஸில் பகிர்ந்துள்ளார்.
அதேநேரம், விபத்து தொடர்பான மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
அதில் அஜித்தின் கார் பலமுறை விபத்துக்குள்ளாகி புரலுகின்றது.
எவ்வாறெனினும், இந்த சம்பவத்திற்கு பின்னர் காயத்திலிருந்து தப்பிய அஜித்குமார் புன்னகையுடன் கை அசைத்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தார்.
பந்தயத்தில் கவனம் செலுத்துவதற்காக கடந்த ஒரு வருடமாக தனது நடிப்பை ஓரங்கட்டிவிட்டார் அஜித்.
போர்ஷே 992 GT3 கிண்ணப் பிரிவில் FIA 24H தொடரில் புதிதாக உருவாக்கப்பட்ட தனது சொந்த அணியான அஜித் குமார் ரேசிங்குடன் அவர் அறிமுகமானார்.
இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது முதல் தொழில்முறை பந்தயத்தை குறிக்கிறது.