2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் ஆறாவது போட்டியில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இரு அணிகளும் தங்கள் தொடக்கப் போட்டிகளில் மாறுபட்ட ஆரம்பங்களைக் கொண்டுள்ளன.
நியூசிலாந்து, நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடங்கியது.
பங்களாதேஷுக்கு எதிரான வெற்றியானது அரையிறுதியில் அவர்களின் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்து, போட்டியில் மேலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
இதற்கு நேர்மாறாக, பங்களாதேஷ் தோல்வியுடன் சாம்பியன் 2025 டிராபி ஆட்டத்தை தொடங்கியது.
இந்தியாவுடனான முதல் போட்டியில் அவர்கள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
அரையிறுதி முன்னேற்றத்துக்கான அவர்களின் வாய்ப்பு ஒரு நூலால் தொங்கிக்கொண்டிருப்பதால் நியூஸிலாந்துடனான இன்றைய ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்று ஆக வேண்டும்.
மாறாக இந்த ஆட்டத்தில் அவர்கள் தோல்வியை சந்தித்தால், தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.