கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட வீதி சோதனையின்போதே குறித்த கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின்போது சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 400கிலோவுக்கும் அதிகமான கஞ்சாப் பொதிகளும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியும் இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.