நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (25) வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பக் குறியீடு, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நிழலில் இருக்கவும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.