அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத் திரைப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். அத்துடன் இத் திரைப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகியோரும், முக்கிய கதாபாத்திரத்தில் விஜே சித்து,ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி வெளியான இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 6 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்களிலும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர் எனவும் இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.