வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 3000 ஆவது போராட்ட நாளான இன்று தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா தோனிக்கல் பகுதியைச் சேர்ந்த 79 வயதான குறித்த பெண் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மகன் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பலவற்றில் தொடர்ந்து முன்னின்று போராடியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.