பங்களாதேஷின் சமிதிபரா பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் விமாப்படை தளத்தில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலை சற்றும் எதிர் பார்க்காத பாதுகாப்புப் படையினர், குறித்த மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச் சம்பவத்தில் உள்ளூரை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க கூடுதல் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.