மொறட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவும் குறித்த இடத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.