நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வறண்ட காலநிலையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நாட்களில் நீர் பாவனை அதிகரித்துள்ளதோடு, நீர் வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வாகனங்களை கழுவுதல், தோட்டக்கலை மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு நீர் பாவனையை குறைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரியுள்ளது.
தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள சில வாடிக்கையாளர்களுக்கு புசர் மூலம் நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, வறண்ட காலநிலையுடன் மின்சார உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.