உலக செஸ் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை (கிளாசிக்கல்) சர்வதேச செஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி முன்னாள் உலக செம்பியனான நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 2,833 புள்ளிகளுடன் 1 ஆவது இடத்திலும், ஜப்பானின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஆண்டு டிசம்பர் உலக செஸ் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சென்னையைச் சேர்ந்த குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன் சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா 2,758 புள்ளிகளைப் பெற்று 8ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு டொப்-10 இடங்களுக்குள் வருவது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.