பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
27 வயதான சந்தேக நபர் பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள் இருந்தபோது ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.