2025 ஆம் ஆண்டிற்கான 500,000 ஆவது சுற்றுலாப் பயணியை இலங்கை பெப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் வரவேற்றதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெப்ரவரி மாத இறுதிக்குள் 500,000 சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முடிந்திருப்பது, ஆண்டு இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது.
இலங்கையை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும்.
2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை அடைவதில் சுற்றுலா அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது என்று ருவன் சமிந்த ரணசிங்க மேலும் கூறினார்.