சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் கண்டியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.