பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே (Rodrigo Duterte) கைது செய்யப்பட்டுள்ளார்.
“போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இன்டர்போல் பிடியாணை உத்தரவு பிறப்பித்தன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
டுடெர்ட்டே ஹாங்கொங்கிலிருந்து நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாட்டின் அதிபராக இருந்தபோது டுடெர்ட்டே மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
79 வயதான அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகளுக்கு பதிலளிக்கும் போது, சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக முன்னதாகக் கூறியிருந்தார்.
பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி இந்த கைது நடவடிக்கையை “வரலாற்றுத் தருணம்” என்று குறிப்பிட்டுள்ளது.
எனினும். டுடெர்ட்டின் முன்னாள் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, பிலிப்பைன்ஸ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இருந்து விலகியுள்ளதால் இந்த கைது சட்டவிரோதம் என்று கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், பிலிப்பைன்ஸ் உறுப்பினராக இருந்து விலகுவதற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக ஐ.சி.சி., பிலிப்பைன்ஸில் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது என்று கூறியது.
மே 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தலில் தனது செனட்டர் பதவிக்கான பிரச்சார பணிகளுக்காக டுடெர்ட்டே ஹாங்காங்கில் இருந்தார்.