இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.
அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.