இங்கிலாந்தின் சில பகுதிகளில் புகைபிடிக்கும் விகிதம் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி கூறுகிறது.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கல்வியாளர்கள், 18 வருட காலப்பகுதியில் இங்கிலாந்தில் 350,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடம் புகைபிடித்தல் தரவுகளை ஆய்வு செய்தனர்.
சிகரெட், பைப், சுருட்டு அல்லது பிற வகையான புகையிலை புகைக்கும் பெரியவர்களின் விகிதம் 2006 இல் மக்கள் தொகையில் 25.3% ஆக இருந்து.
இந்த நிலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2020 மற்றும் 2024 க்கு இடையில் தெற்கு இங்கிலாந்தில் புகைபிடித்தல் 10% அதிகரித்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாறாக, வடக்கில் அதே காலகட்டத்தில் விகிதங்கள் 9.7% குறைந்துள்ளன.
முந்தைய ஆராய்ச்சிகள் பெண்கள் அதிகமாக புகைபிடிப்பதாகக் கூறுகின்றன, அதே நேரத்தில் இளைய வயதினரிடையே விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளன,
தென்மேற்குப் பகுதியில் புகைபிடிக்கும் விகிதங்கள் மிகப்பெரிய உயர்வைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது 2020 மற்றும் 2024 க்கு இடையில் 17% அதிகரித்து 18.7% ஆக இருந்தது,
அதே நேரத்தில் தென்கிழக்கு மற்றும் லண்டனில் விகிதங்கள் முறையே 9% மற்றும் 8% அதிகரித்தன.
மொத்த மக்கள்தொகைக்கும் இந்த புள்ளிவிவரங்களை விரிவுபடுத்தினால், இங்கிலாந்தில் 7.5 மில்லியன் பெரியவர்கள் புகைபிடிப்பதாக மதிப்பிடப்படும்.
இவர்களில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கில் 3.3 மில்லியன் பெரியவர்கள் புகைபிடிக்கின்றனர் – இது 2020 ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட 400,000 தொகை அதிகமாகும்.
இதற்கு நேர்மாறாக, இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் 2 மில்லியன் புகைப்பிடிப்பவர்கள் உள்ளனர் – இது 2020 ஆம் ஆண்டை விட 160,000 தொகை குறைவாகும்.