யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர், அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்கள், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றார்.
இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.