இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் இன்று (20) விவாகரத்து வழங்கியது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 இல் பஞ்சாப் கிங்ஸுடனான சாஹலின் உறுதிமொழிகளைக் கருத்தில் கொண்டு, நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு புதன்கிழமை (19) மும்பை மேல் நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து, விசாரணை வியாழக்கிழமைக்கு திட்டமிடப்பட்டது.
கிரிக்கெட் வீரரும் அவரது பிரிந்த மனைவியும் பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்திற்கு இன்று வந்த நிலையில், பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட கூட்டு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
2020 இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2025 பெப்ரவரி 5, அன்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து, ஜூன் 2022 முதல் தனித்தனியாக வசித்து வந்தனர்.
விவாகரத்து தீர்வு விதிமுறைகளை சாஹல் நிறைவேற்றினார்.
இதன்படி அவர் தனஸ்ரீக்கு 4.75 கோடி இந்திய ரூபா செலுத்த வேண்டும்.
அவர் ஆரம்பத்தில் 2.37 கோடி இந்திய ரூபாவை செலுத்தினார்.
விவாகரத்து ஆணை வழங்கப்பட்ட பின்னரே இரண்டாவது தவணை செலுத்தப்படும் என்று மும்பை மேல் நீதிமன்றம் குறிப்பிட்டது.