குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பிலான விசாரணைகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, இந்த மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைத்து உண்மைகளை சரிபார்க்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.