கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகலகம் வீதி பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மேலும் இருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்தக் குற்றத்திற்கு உதவிய குற்றத்திற்காக ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவினால் கடந்த 18 ஆம் திகதி அன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேக நபரின் மனைவி நேற்று (20) கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 24 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.