டெல்லியில் இருந்து சிம்லாவுக்குச் செல்லும் அலையன்ஸ் ஏரின் எண் 9I821 இன் விமானம் இன்று (24) காலை சிம்லா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பிரேக்குகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேச துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 44 பயணிகள் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த சிக்கலைச் சரிபார்க்க விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை ஆய்வுக்காக நிறுத்தி வைத்துள்ளதாக சிம்லா விமான நிலைய வட்டாரம் ANI இடம் கூறியுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.