முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஏப்ரல் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்லை பகுதியில் வைத்து மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.