ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.
இதன்போது இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு பல்வேறு பட்ட ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டுள்ளது.