இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது.
வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம்,இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இதேவேளை பிரதமர் குறித்த விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர், செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் ஒன்றைக் கூறி தனது நன்றியை தெரிவித்தார்.
குறித்த திருக்குறளின் பொருளானது ” நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை எனவும், அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது X தளத்தில் தமிழ் மொழி மூலம் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவானது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மித்ர விபூஷண பதக்கத்தின் சிறப்பம்சங்கள்
- தர்ம சக்கரம் இரு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைத்த பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை குறிக்கிறது.
- அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு பானையான பொன் கலசம், செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.
- நவரத்தினம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது, இது தூய தாமரை இதழ்களால் சூழப்பட்ட ஒரு பூகோளத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
- சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது.
- இந்த விருது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்புஇ கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் ஆன்மீக ராஜதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பிற்கும் ஒரு ஒளிரும் அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வளர்ப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.