கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதி இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கு படகுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று (08) அதிகாலை நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மீட்பு இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் பெறுமதியானது 121 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மரதன்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.