தமிழக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை நேற்று முன்தினம் ஒரு நாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.
நேற்றும் அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். மேலும் மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.