புத்தாண்டு காலத்தில் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாதாரணமாக வாராந்தம் திடீர் விபத்துக்கள் காரணமாக அரச வைத்தியசாலைகளில் 20,000 – 24,000 வரையானவர்கள் உள்நோயாளர்கள் பிரிவில் சிகிச்சைப் பெறுகின்ற போதிலும், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 8-16 வரையான பண்டிகைக் காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 22,000 இலிருந்து 28,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் புத்தாண்டின் போது 28,000 முதல் 30,000 வரையிலானவர்கள் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக விசேட வைத்திய மேலும் குறிப்பிட்டுள்ளார்.